T20 உலகக் கிண்ணம் ; இந்தியா 8 விக்கெட்களால் வெற்றி

T20 உலகக் கிண்ணம் ; அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

by Staff Writer 06-06-2024 | 9:40 AM

Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது.

Gareth Delany 26 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

பந்துவீச்சில் Hardik Pandya 3 விக்கெட்களையும் Arshdeep Singh, Jasprit Bumrah ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

97 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 12.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித்தலைவர் Rohit Sharma 52 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் உபாதை காரணமாக வௌியேறினார்.

Rishabh Pant ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

ஏனைய செய்திகள்