தாக்குதலில் பாடசாலையில் தங்கியிருந்த 40 பேர் பலி

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காஸா பாடசாலையில் தங்கியிருந்த 40 பேர் பலி

by Bella Dalima 06-06-2024 | 3:22 PM

Colombo (News 1st) இஸ்ரேல் ​நேற்று (05) இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவின் பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த இடம்பெயர்ந்தவர்கள் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

காஸாவின் Nuseirat பகுதியில் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அகதிகள் முகாமில் இருந்தவர்களே கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வௌியிட்டுள்ளன. 

ஐக்கிய நாடுகள் சபையினால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த UNRWA பாடசாலையே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.  

எனினும், ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருந்த பாடசாலை மீதே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 

அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அதனை சமாளிக்க இஸ்ரேல் பொய்க் கதைகளை கூறி வருவதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.