கல்விசாரா ஊழியர்களின் கொடுப்பனவு குறித்து அமைச்சர்

கல்விசாரா ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் இந்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் - சுரேன் ராகவன்

by Staff Writer 16-05-2024 | 7:47 AM

Colombo (News 1st) திறைசேரிக்கு கிடைத்துள்ள வரி வருமானத்தை கருத்தில் கொண்டு, கல்விசாரா ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறித்து இந்த வாரத்தில் தீர்மானமொன்று எடுக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வருடாந்தம் சுமார் 1.3 பில்லியன் ரூபா செலவாகும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.

அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு சாதகமான பதில் வழங்காமைமே பணிப்பகிஷ்கரிப்பிற்கு காரணமாகும்.

அதன்படி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 15ஆவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தில் 15 வீத வெட் அறவிடப்படுவது மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவின் இணை தலைவர் தம்மிக்க S.பிரியந்த தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்க ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று தீர்மானித்துள்ளது.