புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாட முடியும் - கஞ்சன விஜேசேகர

by Staff Writer 19-04-2024 | 5:47 PM

Colombo (News 1st) புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாட முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 

எவ்வாறாயினும், மின் கட்டணத்தை குறைப்பதே புதிய மின்சார சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அவர் கூறினார். 

அதற்கான இரண்டு வழிமுறைகளில் இரண்டாவதான நிர்வாகச் செலவைக் குறைப்பதனையே தற்போது மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

அதன் முதலாவது வழிமுறையான மின்னுற்பத்தி செலவைக் குறைப்பதற்கு, எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு பதிலாக மீள்புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டுவரவுள்ளதாக அவர் கூறினார். 

இந்த நிலையில், முறையான ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வின்றி இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.