கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு

ஏப்ரல் 24 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

by Bella Dalima 19-04-2024 | 3:36 PM

Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை (24) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கிணங்க, ஏப்ரல் 24 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க - சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, மஹர, தொம்பே, கட்டான ஆகிய பகுதிகளிலும், மினுவாங்கொட பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.