இந்தியாவின் 18ஆவது மக்களவைத் தேர்தல்

இந்தியாவின் 18ஆவது மக்களவைத் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு

by Staff Writer 19-04-2024 | 12:30 PM

இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பு, 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களிலுள்ள 102 தொகுதிகளில் இன்று(19) நடைபெறுகின்றது.

தமிழ்நாட்டில் மொத்தமாகவுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று வாக்களிப்பு இடம்பெறுகின்றது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 39 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் 950 வேட்வாக்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 874 ஆண்களும், 76 பெண்களும் அடங்குகின்றனர்.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 6 கோடியே 23 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக தமிழகத்தின் 44 ஆயிரத்து 800 வாக்களிப்பு நிலையங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு குறிப்பிட்டுள்ளார். 

இந்திய மக்களவைத் தேர்தல் 28 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் 7 கட்டங்களாக நடைபெறுகின்றது.

ஜூன் மாதம் முதலாம் திகதி 7ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகள் ஜூன் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வௌியிடப்படுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்