உலகக்கிண்ண தொடர்கள் உள்ளடங்கலாக 6 கிரிக்கெட் தொடர்களை இலங்கையில் ஔிபரப்பும் உரிமம் MTV செனல் வசம்

by Bella Dalima 12-04-2024 | 5:34 PM

Colombo (News 1st) 2025 ஆம் ஆண்டு இறுதி வரை ICC நடத்தும் 4 உலகக்கிண்ண தொடர்கள் உள்ளடங்கலாக 6 கிரிக்கெட் தொடர்களை இலங்கையில் ஔிபரப்புவதற்கான உரிமத்தை MTV Channel  தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையும், MTV Channel தனியார் நிறுவனமும் இதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து போட்டிகளையும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஒளிபரப்பும் உரிமை சிரச தொலைக்காட்சி , TV 1 மற்றும் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான டிஜிட்டல் உரிமைகளையும் MTV Channel  பெற்றுள்ளது.

2024 உலகக்கிண்ண T20 கிரிகெட் போட்டி

மகளிர் T20 உலகக்கிண்ண போட்டிகள்
2025 -19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

2025 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

குறித்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.