இலங்கையின் நெத்மிகாவிற்கு வெள்ளிப்பதக்கம்

20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் நெத்மிகா மதுஷானிக்கு வெள்ளிப்பதக்கம்

by Staff Writer 25-04-2024 | 9:52 AM

Colombo (News 1st) 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பின் மகளிருக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கையின் நெத்மிகா மதுஷானி ஹேரத் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இது அவருடையய தனிப்பட்ட சிறப்புப் பெறுபேறாக அமைந்துள்ளது.

துபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நெத்மிகா 13.01 மீட்டர் தூரம் வரை பாய்ந்துள்ளார்.