சிறந்த கிரிக்கெட் வீரராக கமிந்து மென்டிஸ் தெரிவு

மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக கமிந்து மென்டிஸ் தெரிவு

by Staff Writer 08-04-2024 | 10:01 PM

Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால், மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக கமிந்து மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அயர்லாந்து அணியின் மார்க் ஏடாய் மற்றும் நியூசிலாந்து அணியின் மெட் ஹென்றி ஆகியோர் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விருதை பெரும் மூன்றாவது இலங்கை வீரராக கமிந்து மென்டிஸ் பதிவாகியுள்ளார்.

பிரபாத் ஜயசூரிய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் இதற்கு முன்னர் இந்த விருதை பெற்றிருந்தனர்.

இவ்வாறான விருதுகள் தொடர்ந்தும் விளையாட்டில் சிறந்து பிரகாசிக்க உத்வேகத்தை தருவதாக கமிந்து மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய கமிந்து மென்டிஸ், டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளிலும் சதம் கடந்தார்.

அத்துடன், பந்துவீச்சிலும் அவர் சிறப்பாக பிரகாசித்தார்.