முதல் தடவையாக தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை

மகளிருக்கான சர்வதேச T20 கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை

by Staff Writer 04-04-2024 | 9:47 AM

Colombo (News 1st) தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான T20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2 - 1  என கைப்பற்றியுள்ளது.

நேற்றைய மூன்றாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி, 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

சமரி 73 ஓட்டங்களையும் ஹர்ஸிதா சமரவிக்ரம 54 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர்.