பங்களாதேஷுடனான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இலங்கை

by Staff Writer 03-04-2024 | 2:03 PM

Colombo (News 1st) பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 192 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் ஊடாக இலங்கை அணி தொடரை தனதாக்கியது.

511 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, சகல விக்கெட்களையும் இழந்து 318 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Mominul Haque 50 ஓட்டங்களையும் Mehidy Hasan Miraz ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும் பெற்றார்.

லஹிரு குமார 4 விக்கெட்களையும் கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2 சதங்கள் அடங்கலாக 367 ஓட்டங்களையும் 3 விக்கெட்களையும் கைப்பற்றிய கமிந்து மெண்டிஸ் தொடரின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.