கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் பற்றாக்குறையால் வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

by Staff Writer 03-03-2024 | 2:39 PM

Colombo (News 1st) கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் பற்றாக்குறை காரணமாக பல்வேறு வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, குருணாகல் பொது வைத்தியசாலை, பதுளை பொது வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகள் கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார். 

சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் நாட்டிலிருந்து வௌியேறுகின்றமை சடுதியாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.