ஸ்டாலினுக்கு பிறந்தநாள்; சீன மொழியில் வாழ்த்து

தமிழக முதல்வருக்கு பிறந்தநாள்; பாரதிய ஜனதா கட்சியினர் சீன மொழியில் வாழ்த்து

by Bella Dalima 01-03-2024 | 4:36 PM

Colombo (News 1st) இன்று (01) தனது 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்ற தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் சீன மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு விருப்பமான மொழியில் வாழ்த்து தெரிவிப்பதாகவும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துவதாகவும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற குலசேகரன்பட்டினம் ரொக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா R. இராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் பிரசுரித்த விளம்பரங்களில் சீனக் கொடி காணப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர் குப்புசாமி அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.