மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி: இந்தோனேசியாவில் சம்பவம்

by Bella Dalima 13-02-2024 | 4:05 PM

Colombo (News 1st) இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 35 வயதான கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள Siliwangi மைதானத்தில் பாண்டுங் ( 2 FLO FC Bandung) மற்றும் சுபாங் (FBI Subang) அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை (10) நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்னல் பாய்ந்தது. 

இதன்போது, சுபாங் அணியை சேர்ந்த 35 வயதான கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா ( Septain Raharja) மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மயங்கி வீழ்ந்தார். 

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போதும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இந்தோனேசியாவில் இதேபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. கடந்த ஆண்டிலும் கால்பந்து வீரர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்கானார். எனினும், தீவிர சிகிச்சைகளின் பின்னர் அவர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. 

 

ஏனைய செய்திகள்