by Bella Dalima 24-06-2022 | 5:18 PM
Colombo (News 1st) உள்நாட்டிலேயே தனியார் துறையில் தொழிலை தொடர்வதற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
5 வருட சம்பளமில்லாத விடுமுறையில் அரச ஊழியர்கள் தனியார் துறையில் அல்லது வேறு ஏதேனும் தொழிலில் ஈடுபட அனுமதிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் M.M.P.K.மாயாதுன்னே தெரிவித்தார்.
இதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் 7 பேர் அடங்குகின்றனர்.
இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் M.M.P.K.மாயாதுன்னே குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.