UPDATE: ரத்கம விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி (CCTV)

by Staff Writer 01-02-2022 | 3:32 PM
Colombo (News 1st) காலி - ரத்கம, வில்லம ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதி, அவரின் மனைவி, மனைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார். பலத்த காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் உயிரிழந்துள்ளனர். காலியிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கரவண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.