by Staff Writer 06-01-2022 | 4:56 PM
Colombo (News 1st) பருத்தித்துறை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தினுள் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தினுள் சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதன்போது, பொலிஸாரால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுபோதையில் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்று (05) கைது செய்யப்பட்ட 46 வயதான சந்தேகநபரே தூக்கிட்டுக்கொள்ள முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்காகிய பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.