புதிய குழாத்தை அறிவித்தது இங்கிலாந்து

வீரர்களுக்கு கொரோனா: புதிய குழாத்தை அறிவித்தது இங்கிலாந்து

by Bella Dalima 06-07-2021 | 7:09 PM
Colombo (News 1st) பாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான புதிய இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 பேரடங்கிய புதிய குழாமில் சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாத 9 வீரர்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் 3 வீரர்களுக்கும் 4 நிர்வாக ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், புதிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (08) கார்டிப்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஏனைய வீரர்களை சுயதனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸின் தலைமையிலான புதிய குழாத்தில் Brydon Carse, Zak Crawley, Lewis Gregory, Will Jacks, Tom Helm, Dan Lawrence, David Payne, Phil Salt , John Simpson ஆகியோர் புதிதாக களமிறங்கவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. IPL தொடரின் போது பென் ஸ்டோக்ஸின் கைவிரலில் காயமேற்பட்டதால், அவர் கடந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் ஒரு நாள் மற்றும் T20 தொடரிலும் விளையாடவுள்ளது.

ஏனைய செய்திகள்