by Staff Writer 16-10-2021 | 7:02 PM
Colombo (News 1st) இலங்கைக்கு உரம் வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளதாக Ceylon Today பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
சீன உரத்தை ஏற்றிய HIPPO SPIRIT கப்பல் செப்டம்பர் 22 ஆம் திகதி சின்காடோ துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளமை, Vessel Tracker எனப்படும் கப்பல் தரவுக் கட்டமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
20,000 மெட்ரிக் தொன் சேதன பசளையுடன் இந்த கப்பல் சிங்கப்பூரை அண்மித்துள்ளதுடன், அது தற்போது மலாகா நீரிணைக்கு அருகாமையால் பயணித்துக்கொண்டுள்ளது.