நாமல் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

எயார்பஸ் கொடுக்கல் - வாங்கல் வழக்கில் நாமல் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

by Staff Writer 28-10-2026 | 2:50 PM

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(28) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எயார்பஸ் கொடுக்கல் - வாங்கலில் 100 மில்லியன் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்று முறைப்பாட்டாளர் தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சந்தேகநபர் சார்பான பிணை கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

வழக்குடன் தொடர்புடையதாக நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள வழக்கு கோப்புகள் தொடர்பில் முறையான வழிமுறைகளைப் பின்பற்றாது, அதனை நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பியமை குறித்தக் காரணங்களைக் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.