.webp)
-559448.jpg)
Colombo (News 1st) மொனராகலை - ஹம்பேகமுவ பகுதியில் ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்திற்காக தயார் நிலையிலிருந்த 1,044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சா தொகையே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலானை ஊழல் தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த கஞ்சா தொகையின் பெறுமதி 7,37 80,000 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த பகுதியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்த மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றரை ஏக்கர் காணியில் கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அங்கிருந்து 54,096 கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
