.webp)
-559048.jpg)
Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள பல பிரதேச செயலக பிரிவுகளில் அஸ்வெசும உதவி தொகையை பெற்றுக்கொடுப்பதில் மோசடியில் ஈடுப்பட்ட 14 அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
குறித்த அதிகாரிகள் தமது சொந்த கணக்குகளுக்கு அஸ்வெசும பணத்தை வரவு வைத்துள்ளமை விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்துள்ளார்.
2023 முதல் பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணம் செலுத்துதல் மற்றும் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்துள்ளார்.
