சவால்களை ஏற்காமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது: சட்டத்தரணிகள் சங்க சந்திப்பில் ஜனாதிபதி

by Staff Writer 13-08-2026 | 1:31 PM

Colombo (News 1st) சவால்களை எதிர்கொள்ளாமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று(12) நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தினருடனான சந்திப்பில் தெரிவித்தார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த அரசியலமைப்பு திருத்தமானது தனிநபர்களை இலக்காகக் கொண்டதல்ல என குறிப்பிட்டார்.

இதுவொரு அரசியலமைப்பு ரீதியான அணுகுமுறை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.