GLASGOW பொதுநலவாய விளையாட்டு விழா நிறைவு

GLASGOW பொதுநலவாய விளையாட்டு விழா: பதக்கப்பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம்

by Staff Writer 03-08-2026 | 8:30 AM

Colombo (News 1st) 2026 GLASGOW பொதுநலவாய விளையாட்டு விழாவின் பதக்கப்பட்டியலில் அவுஸ்திரேலியா அதிக பதக்கங்களுடன் முன்னிலையிலுள்ளது.

70 தங்கப் பதக்கங்கள், 45 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 56 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 171 பதக்கங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது.

29 தங்கப் பதக்கங்கள், 45 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களை வென்ற இங்கிலாந்து, பதக்கப் பட்டியலில் 2ஆவது இடத்தை பெற்றது.

19 தங்கப் பதக்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 23 வெண்கலப் பதக்கங்களுடன் கனடா, 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கை, 17ஆவது இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 10 நாட்கள் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் விழா நேற்றிரவு(02) நிறைவடைந்தது.

இந்நிலையில், அடுத்த பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்தவுள்ள இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ கொடி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

அடுத்த பொதுநலவாய விளையாட்டு விழா 2030ஆம் ஆண்டு இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.