.webp)
-557515.jpg)
Colombo (News 1st) மகாவலி காணி முதலீட்டு திட்டத்தின் கீழ் கிரிஇப்பன்வெவ, ஜனகபுர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உப்பளத்தின் முதலாவது அறுவடை எதிர்வரும் 2 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
49 ஏக்கர் நிலப்பரப்பில் குறித்த உப்பளம் தனியார் முதலீட்டாளர் ஒருவரினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபையின் வியாபார அபிவிருத்தி பிரிவு உதவிப் பணிப்பாளர் டிலங்க ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மகாவலி காணி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 5,316 ஹெக்டேயர் காணிகளைப் பயனுள்ள செயற்திட்டங்களுக்காக விடுவிப்பதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்கீழ் 12 செயற்றிட்டங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த வேலைத்திட்டங்களுக்கு மத்தியில் இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் "மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையமொன்று" நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தம்புள்ளை - மடாட்டுகம பிரதேசத்தில் நட்சத்திர கண்காணிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபையின் வியாபார அபிவிருத்திப் பிரிவு உதவி பணிப்பாளர் டிலங்க ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
