.webp)

Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல் நோக்கி பயணத்தை ஆரம்பித்த விமானத்தை திடீரென தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் பறவைகள் மோதியதன் காரணமாக தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
எரிபொருளின் அளவை குறைப்பதற்காக குறித்த விமானம் நீர்கொழும்பு களப்பிற்கு மேலான வான்பரப்பில் பறக்க ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று(11) காலை 07.07 அளவில் கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 253 பயணிகளும் 10 பணியாளர்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விமானத்திலுள்ள எரிபொருள் அளவு குறைக்கப்பட்ட பின்னர், விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்படவுள்ளது.
