பொதுமக்கள் அவசர நிலை நீடிக்கப்பட மாட்டாது - நலிந்த

பொதுமக்கள் அவசர நிலை நீடிக்கப்பட மாட்டாது - அமைச்சர் நலிந்த

by Staff Writer 01-07-2026 | 6:30 PM

Colombo (News 1st) பொதுமக்கள் அவசர நிலை இம்மாதம் முதல் நீடிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

டித்வா சூறாவளியின் பின்னர் ஏற்பட்ட நிலைமைகளின் காரணமாக எதிர்க்கட்சி தலைவர்களுடனும் கலந்துரையாடி பொதுமக்கள் அவசர நிலையை அறிவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் கூறினார்.

பொதுமக்கள் அவசர நிலையை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக சிலர் அச்சத்தை உருவாக்க முயன்றதாக அமைச்சரவை பேச்சாளர் இதன்போது தெரிவித்தார்.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக மாத்திரமே இதனை பயன்படுத்துவதாக அரசாங்கம் தௌிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.