.webp)

Colombo (News 1st) இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், இந்திய A அணியுடனான போட்டியில் இலங்கை A அணி வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய A அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 265 ஓட்டங்களை பெற்றது.
Suryansh Shedge 72 ஓட்டங்களையும் Vipraj Nigam 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
விஜயகாந்த் வியாஸ்காந்த் தலா 03 விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி தலைவர் நிரேஷன் திக்வெல்ல 37 ஓட்டங்களை பெற்றார்.
அணி சார்பில் சதீர சமரவிக்கிரம 93 ஓட்டங்களை பெற்றார்.
50 ஓவர்கள் நிறைவில் இலங்கை A அணி 09 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களை பெற்றது.
போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி 16 ஓட்டங்களை பெற்றது.
17 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய A அணியால் 09 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இதன் பிரகாரம் இலங்கை A அணி வெற்றி பெற்றது.
தொடரில் பங்கேற்ற 3 போட்டிகளில் இரண்டை வெற்றி கொண்ட இலங்கை, முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
