இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 32 அதிகாரிகள் கைது

வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 32 அரச அதிகாரிகள் கைது

by Staff Writer 11-06-2026 | 7:43 AM

Colombo (News 1st) இவ்வருடத்தின் முதல் 04 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 32 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 51 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 19 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில், இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 3,349 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 314 வழக்குகள், நீதிமன்றங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.