.webp)

Colombo (News 1st) கிண்ணியா - மூதூர் எல்லை பகுதியில் அமைந்துள்ள பாலத்தை அண்மித்து பயணிகள் பஸ் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலையில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
