.webp)

Colombo (News1st) நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இன்று(16) மாலை இடியுடன் கூடிய மழையுடன் கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ளத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
