.webp)

Colombo (News 1st) நாளை(24) முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
எரிபொருளின் விலை அதிகரிப்பினால் முச்சக்கர வண்டி கட்டணங்களில் தற்காலிகமாக திருத்தம் மேற்கொள்வதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவித்தார்.
முதலாவது கிலோமீட்டருக்கான கட்டணம் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய கட்டணம் 110 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கிலோமீட்டரில் இருந்து அதிகரிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்குமான கட்டணம் 90 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டணம் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
