.webp)

Colombo (News 1st) பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று(23) நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பேக்கரி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு இணங்கவே விலை அதிகரிக்கப்படுவதாக சங்கத்தின் என்.கே.ஜயவர்தன கூறினார்.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல முடியாத நிலையில் விலைகளை அதிகரிக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.
கோதுமை விலை அதிகரிப்பை தவிர எந்தவொரு சந்தரப்பத்திலும் எரிபொருள் விலை அதிகரிப்பினால் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று(23) நடைபெற்ற கூட்டத்தில் விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
450 கிராம் நிறையுடைய பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
