.webp)

Colombo (News 1st) கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஈட்டிய சொத்துக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச, ஊழல் விசாணை ஆணைக்குழுவினால் சஜின் டி வாஸ் இன்று(09) கைது செய்யப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினராகவும் வௌிவிவகார அமைச்சின் முன்னாள் மேற்பார்வை உறுப்பினராகவும் சஜின் வாஸ் குணவர்தன செயற்பட்டுள்ளார்.
