.webp)

Colombo (News 1st) மட்டக்களப்பு - கோரளைப்பற்று பகுதியில் தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோரளைப்பற்று பகுதியில் கடந்த நவம்பர் 07ஆம் திகதி தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்ட நிலையில் வாழைச்சேனை - கோரளைப்பற்று பிரதேச சபை வளாகத்திலிருந்து அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கோரளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு நவம்பர் 25ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
கோரளைப்பற்று பகுதியில் தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு வாழைச்சேனை நீதவான் ரதீப் அஹமட் முன்னிலையில் இன்று(09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டத்தரணிகளான F.H.S.விஜயகுமார் மற்றும் ஹபீப் ரிபான் ஆகியோர் பிரதிவாதிகள் சார்பில் ஆஜாராகியிருந்தனர்.
