.webp)

Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தில் கப்பலிலிருந்து மசகு எண்ணெய் இறக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியன இணைந்து கடலில் கசியும் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், எரிபொருள் இறக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குழாயில் ஏற்பட்டுள்ள கோளாறை சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
