பாராளுமன்றை 18ஆம் திகதி கூட்டுவதற்கான வர்த்தமானி

பாராளுமன்றை எதிர்வரும் 18ஆம் திகதி கூட்டுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 13-12-2025 | 3:19 PM

Colomvo (News 1st) பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி கூடுவதற்காக அழைப்பு விடுத்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கமைய, பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 09.30-க்கு கூடவுள்ளது.

சபாநாயகர், டொக்டர் ஜகத் விக்ரமரத்னவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.