.webp)
-551461.jpg)
Colombo (News 1st) ரம்புக்கனை - மாவனெல்ல வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி மீது நேற்றிரவு(23) மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்துள்ளனர்.
பொலிஸார், இராணுவத்தினர், தீயணைப்புப் பிரிவினர் , பொதுமக்கள் உள்ளிட்டோர் இணைந்து முச்சக்கர வண்டியில் சிக்கியிருந்தோரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ள நிலையில், 57 வயதான ஆண், 48 வயதான பெண் மற்றும் இரண்டரை வயதான பெண் குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
