.webp)

Colombo (News 1st) நீர்கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று(07) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பெரியமுல்ல, ஏத்துகல, குடாபாடுவ, தளுபொத, கட்டுவ, லெவிஸ் பிளேஸ், செல்லகந்த வீதி மற்றும் வெல்ல வீதி ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர்கொழும்பு நீர்வழங்கல் கட்டமைப்பின் பெரியமுல்ல நீர்வழங்கல் கோபுரத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
