யோஷித, டெய்ஸி மீதான வழக்கின் விசாரணை நவம்பர் 12

யோஷித, டெய்ஸி ஃபொரஸ்ட்டுக்கு வழக்கின் பூர்வாங்க விசாரணை நவம்பர் 12ஆம் திகதி

by Staff Writer 06-11-2025 | 12:53 PM

Colombo (News 1st) யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கின் பூர்வாங்க விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று(06) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது யோஷித, டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

சுமார் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முறைகேடாக கையகப்படுத்தியமையின் ஊடாக நிதிதூய்தாக்கல் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.