நெடுந்தீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது

by Staff Writer 28-09-2025 | 1:52 PM

Colombo (News 1st) Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே இன்று(28) அதிகாலை இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் சம்பத் புத்திக தெரிவித்தார்.

மீனவர்களின் படகும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.