தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை..

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை..

by Staff Writer 09-08-2025 | 7:10 PM

2025 ஆண்டுக்கான தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

2,787 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கூறினார்.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் 307,951 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

பரீட்சை தினத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திடீர் அனர்த்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திடீர் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் 117 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் அளிக்க முடியுமென அவர் குறிப்பிட்டார்.

பரீட்சை காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளதுடன் பரீட்சார்த்திகள் 08.30க்கு பரீட்சை மத்திய நிலையங்களில் அமர வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.

பரீட்சைக்கு தேவையான எழுதுகருவிகள் தவிர்ந்து ஏனைய பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பரீட்சை நிலைய வளாகத்திற்குள் பரீட்சார்த்திகள், பரீட்சை பணிக்குழுவினர் தவிர்ந்த வேறு எவருக்கும் அனுமதி இல்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே மேலும் கூறினார்.