GovPay கட்டமைப்புடன் மேலும் 50 அரச நிறுவனங்கள்

GovPay கட்டமைப்புடன் மேலும் 50 அரச நிறுவனங்களை இணைக்க திட்டம்

by Staff Writer 10-08-2025 | 7:06 AM

Colombo (News 1st) GovPay கட்டமைப்புடன் மேலும் 50 அரச நிறுவனங்களை இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருணி ஸ்ரீ தனபால தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதமாக பெயரிடப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய டிஜிட்டல் பொருளாதார மாதம் அமுல்படுத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது இதன் நோக்கமாகும்.