.webp)
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 1,553 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்புகளின் போது 302 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 76 பேரும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 40 பேரும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைக்காக 4,453 பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.