5 நாட்டு தூதுவர்களை சந்தித்தார் பிரதமர்

5 நாட்டு தூதுவர்களை சந்தித்தார் பிரதமர்

by Staff Writer 26-07-2025 | 4:39 PM

பூட்டான், கசக்ஸ்தான், ஜோர்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளின் தூதர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு பிரதிபலிப்பதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்தது.

நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நலன்கள், நிர்வாகம், இலங்கையின் வளர்ச்சி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான ஆதரவு குறித்து இந்த கலந்துரையாடலில்  கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆடை உற்பத்தி, கல்வி, கலாசார பரிமாற்றம், ஏற்றுமதி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்