.webp)
1000 தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் மற்றும் இராஜாங்க அமைச்சின் 72 திட்டங்கள் குறித்து கோபா குழுவினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 3 மாதங்களுக்குள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோபா குழு பரிந்துரைத்துள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் துறை தெரிவித்தது.
2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தற்போதைய செயற்திறன் குறித்து கோபா குழுவில் அண்மையில் ஆராயப்பட்ட போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்ட 1000 தேசியப்பாடசாலைகள் வேலைத்திட்டம் வெற்றியளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 23 பாடசாலைகள் மாத்திரமே தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், 809 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தி பெயர்ப்பலகைகளை தயாரிப்பதற்கு 2.42 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 72 திட்டங்கள் குறித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.