கேகாலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

கேகாலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

by Staff Writer 21-07-2025 | 4:07 PM

Colombo (News 1st) கேகாலை - கலிகமுவ பகுதியில் இன்று(21) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பஸ், வேரகொடையில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஆகியன ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 24 பேர் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் வறக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் சாரதி பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்திற்கான காரணமாகும் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொழும்பு - கண்டி பிரதான வீதியின் தித்வெல்மங்கட பகுதியில் டிப்பர் வாகனமும் பஸ்ஸும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஏனைய செய்திகள்