சர்வதேசத்துக்கு செல்லும் M Entertainments

இலங்கை இசைத்துறையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் M Entertainments

by Rajalingam Thrisanno 19-07-2025 | 10:56 AM

Colombo (News 1st) இசை என்பது மானிட வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று என்றால் அது மிகையாகாது.

ஆம். இசையை இரசிக்காத மனிதர்களை காண்பதென்பது அரிதிலும் அரிது.

அந்த வகையில் இலங்கையின் இசையை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்லும் மற்றுமொரு உன்னத முயற்சியை  M Entertainments முன்னெடுத்துள்ளது.

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின்  M Entertainments இந்தியாவின் Warner Music India நிறுவனத்துக்கு சொந்தமான Divoவுடன் கைகோர்த்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இந்தியாவின் மும்பையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் Warner Music India மற்றும் SAARC முகாமைத்துவ பணிப்பாளர் ஜே மேத்தா, கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், Divo முகாமைத்துவ பணிப்பாளர் ஷஹீர் முனீர் மற்றும்  M Entertainments பிரதம நிறைவேற்று அதிகாரி பெட்ரிக் திசாநாயக்க ஆகியோர் இணைந்துகொண்டனர்.

Warner Music India நிறுவனத்திற்கு சொந்தமான Divo, தெற்காசியாவிலுள்ள திறமை வாய்ந்த கலைஞர்களின் ஆற்றல்களை  சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்வதற்காக அதீத பங்களிப்பு வழங்கும் ஒரு நிறுவனமாகும்.

இந்தியா, இலங்கையைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற இரண்டு நிறுவனங்கள் இவ்வாறு கைகோர்த்துள்ளமையானது இந்த நாட்டு இசைத்துறையை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்லவும் அவற்றுக்கு மேன்மையான பொருளாதார பெறுமதியை பெற்றுக்கொள்வதற்கு பாரிய உந்துசக்தியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

அத்துடன், இது இலங்கை இசைத்துறையில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் கலைஞர்களுக்கு பேருதவியாக இருக்கும் எனநம்பலாம்.