முதல் முறையாக விம்பிள்டன் பட்டம் வென்ற ஜானிக்..

சர்வதேச டென்னிஸ் அரங்கில் முதல் முறையாக விம்பிள்டன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்

by Staff Writer 14-07-2025 | 7:07 AM

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றைப் பிரிவு இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் மோதினர்.

கார்லோஸ் அல்காரஸ் (Carlos Alcaraz) முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார்.

அடுத்த 3 செட்களையும் 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் ஜானிக் சின்னர் (Jannik Sinner) வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன்மூலம் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் 'இத்தாலி வீரர்' என்ற சாதனையை சின்னர் படைத்தார்.