தென்னாபிரிக்க மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் : இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி

by Staff Writer 29-10-2025 | 9:45 PM

Colombo (News 1st) 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரில் தென்னாபிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று(29) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா 125 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களை குவித்தது.

அணித்தலைவி ரொவ்ரா வொல்வரேட் 20 பவுன்டரிகள் 04 சிக்சர்களுடன் 143 பந்துகளில் அதிரடியாக 169 ஓட்டங்களை விளாசினார்.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து மகளிர் அணி, 02 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் 03 விக்கெட்களையும் இழந்து தோல்வியின் பிடிக்குள் சிக்கியது.

தென்னாபிரிக்காவின் அபார பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி 42.3 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

போட்டியில் 125 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க மகளிர் அணி உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.